ஒப்புக்கொண்ட ஊதியம் தராவிட்டால் வேலை நிறுத்தம்: ஃபெஃப்சி தலைவர் எச்சரிக்கை

ஒப்புக்கொண்ட ஊதியம் தராவிட்டால் வேலை நிறுத்தம்: ஃபெஃப்சி தலைவர் எச்சரிக்கை
ஒப்புக்கொண்ட ஊதியம் தராவிட்டால் வேலை நிறுத்தம்: ஃபெஃப்சி தலைவர் எச்சரிக்கை
Published on

ஒப்புக்கொண்டபடி ஊதியம் தர மறுத்தால் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் சம்மேளனமான  ஃபெஃப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த விவகாரம் தொடர்பாக சம்மேளனம் சார்பில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதனிடையே, ஃபெஃப்சியுடன் இணைந்து பணியாற்றுவதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஃபெஃப்சியின் அங்கமான டெக்னிஷியன்கள் சங்கத்துடன் முழுவதுமாக இணைந்து பணியாற்ற இயலாத சூழல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com