The GOAT படத்தில் அஜித், SK, விஜயகாந்த்? முக்கிய வில்லன் மோகன் இல்லை? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்...!

நடிகர் விஜய்யின் கோட் படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. படத்திற்கு இதுவரை எந்த Hype-ம் ஏற்றப்படாத நிலையில், கடந்த ஓரிரு நாட்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி வெளியான சில முக்கியமான சுவாரஸ்ய தகவல்களை ஒரு தொகுப்பாக இங்கே பார்க்கலாம்.
The GOAT Vijay
The GOAT VijayPT Web
Published on

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில்!

வெங்கட் பிரபு - விஜய் முதன்முறையாக கைகோர்த்துள்ள தி கோட் திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, யுவன் இசையமைத்துள்ளார். பிரசாந்த், பிரபு தேவா, லைலா, மோகன், சினேகா உள்ளிட்ட பலரும் படத்தில் உள்ளனர்.

இப்படம் பற்றிய பல சுவாரஸ்ய விஷயங்கள் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து வெளிவருகின்றன. அப்படி இதுவரை வெளிவந்த ஒரு சில முக்கிய அப்டேட்டுகள் இதோ..

வில்லன் மோகன் இல்லையா?

ஒரு படத்தில் நாயகனுக்குப் பிறகு பெரிய கதாபாத்திரம் யாருக்கு தரப்படும் என்றால், அது நிச்சயம் அப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்குத்தான். ஆனால் டிரெய்லரை பார்த்த பலரும், வில்லனாக நடிகர் மோகன் எந்த அளவுக்கு திருப்திபடுத்துவார் என்று கேள்வி எழுப்பிவந்தனர். இந்த நிலையில்தான், மோகனுக்கு மேல், மேலும் ஒரு வலுவான வில்லன் பாத்திரம் இருப்பதை உறுதி செய்துள்ளார் வெங்கட் பிரபு. ட்ரெய்லரில் மோகனே வேறொரு வில்லனிடம்தான் பேசுகிறார் என்று ஒரு சமீபத்திய பேட்டியில் வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

The GOAT Vijay
பாராலிம்பிக்ஸ் 2024 | நாட்டிற்கே பெருமை சேர்த்த தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ்

Opening Song விசில் போடு!

கோட் படத்தின் First single ஆக வெளியானது விசில் போடு பாடல். நடிகர் விஜய்யின் குரலில் வெளியான இந்த பாடல்தான், படத்தில் ஓபனிங் Song ஆக இருக்குமென கூறப்பட்டது. ஆனால் அது இருக்காது என தற்போது வெங்கட்பிரபு கூறியுள்ளார். படத்திற்கு ஏற்றபடி, பாடலின் இசையை மெருகேற்றி வேறு ரகத்தில் Theaterical version ஒன்றை உருவாக்கியுள்ளதாம் படக்குழு. அந்த இசையே படத்தில் இடம்பெற்றுள்ளதாம்.

The GOAT-ல் தோனி?

படத்தில் தோனி ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், அதனை மறுத்துள்ளார் வெங்கட் பிரபு. ஆனால், சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே மேட்ச் நடைபெறுவது போன்ற காட்சி இருக்கிறது. அதில் வீரர்கள் காட்டப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அப்புறம் என்ன? Dhoni இல்லாம CSK Match ah?

வெங்கட் பிரபுவிடம் கேட்ட விஜய்!

இந்த படத்திற்கு யுவனின் இசை எந்த அளவுக்கு வலு சேர்க்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், “உன் படத்திற்கு யுவன்தான் இசையமைக்க வேண்டும்” என்று வெங்கட் பிரபுவிடம் விஜய்யே கேட்டிருந்தார் என்றும் அதனாலேயே யுவன் படத்தில் நீடித்ததாகவும் சொல்லப்படுகிறது. விஜய் படத்திற்கென கமர்சியலாக இசையமைத்திருக்கிறாராம் யுவன்.

விஜய் - அஜித் மங்காத்தா கேம்!

‘இனி சத்தியமா குடிக்கவே கூடாதுடா’ என்ற மங்காத்தா விநாயக்கின் வசனத்தை விஜய் பேசியது போல, குட் பேட் அக்லி படத்தில் விஜய்யின் வசனத்தை பேசியிருக்கிறாராம் அஜித். மேலும், கோட் படத்தில் நடிகர் அஜித்தின் மங்காத்தா Portion-ம் இடம்பெறுகிறதாம். மங்காத்தா படத்தில் வேலாயுதம் படம் காட்டப்பட்டதுபோல, இதில் அஜித் படம் இடம்பெற இருக்கிறதாம்.

The GOAT Vijay
அதிரவைக்கும் ’G.O.A.T’ | விஜய்க்கு சம்பளமே ரூ.200 கோடியா? அப்படினா பட்ஜெட், தயாரிப்பு செலவு எவ்வளவு?

ரீமிக்ஸாகும் இளையராஜா பாட்டு!

படத்திற்கு ஜூனியர் ராஜா யுவன் இசைமைத்திருந்தாலும், இளையராஜாவின் பாடல் ஒன்றும் இடம்பெறுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது ரீமிக்ஸாக இருக்குமென சொல்லப்படுகிறது. ஆம், பலருக்கும் பிடித்த ஒரு பாடலை யுவன் மூலம் ரீமிக்ஸ் செய்திருப்பதை உறுதிசெய்துள்ளார் வெங்கட் பிரபு.

கார் நம்பரை கவனிச்சீங்களா?

அதேபோல், கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் காரின் நம்பர் பிளேட் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. CM 2026 என்ற நம்பர் பிளேட் கொண்ட காரில் வருகிறாராம் விஜய். அந்த காட்சியில் தானும் இருப்பதாக உறுதிசெய்துள்ளார் நடிகர் பிரேம்ஜி.

The GOAT Vijay
மங்காத்தா| யுவன் - வாலி நிகழ்த்திய மேஜிக்.. காவியத்தன்மை வாய்ந்த ’என் நண்பனே’ பாடல் - இசை பொக்கிஷம்!

விஜயகாந்த், த்ரிஷா & SK

மேலும், படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு Guest appearance-ல் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இதனை பட்டும்படமால், ஒருவேளை இருக்கலாம் என்று ட்விஸ்ட் கொடுத்து பேசியுள்ளார் வெங்கட் பிரபு. கடைசியாக வெளியான மட்ட பாடலில், நடிகை த்ரிஷா இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படியாக இருக்க நடிகர் அஜித்தை சந்தித்தபோது, மட்ட பாடலை போட்டுக்காட்டியதாக கூறிய வெங்கட்பிரபு, பாடலை த்ரிஷாவிடமும் காட்டியதாக கூறி குழப்பிவிட்டுள்ளார்.

அதேபோல், AI தோற்றத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் எண்ட்ரி தெறியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் தாண்டி, படத்தில் பல ட்விஸ்ட்டுகள், High Moments இருப்பதாகவே படக்குழு தெரிவித்துள்ளது. அவற்றை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ.. ஹைப் இல்லை என வருந்திய விஜய் ரசிகர்களுக்கு, ஒரே நேரத்தில் வரும் அடுத்தடுத்த இந்த தகவல்கள், ஹைப்பை எகிற வைத்துள்ளன!

The GOAT Vijay
’நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.. நீங்கஒரு தலைசிறந்த இயக்குநர்’! - மாரி செல்வராஜை புகழ்ந்த ரஜினி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com