தமிழ் சினிமாவில் நெபாட்டிசம் இருக்கா இல்லையா என தெரியவில்லை, ஆனால் குரூப்பிசம் இருக்கு என ஒளிப்பதவிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ட்விட்டரில் பகிர்ந்த விஷயம் இப்போது வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா பின்புலம் உள்ளவர்கள் அவரது சினிமா வாய்ப்பை தட்டிப்பறித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு, மன அழுத்தத்தால் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்று பெருமளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூட தன்னை பாலிவுட்டில் இசையமைக்கவிடாமல் சிலர் தடுத்து வருவதாக கூறியிருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடராஜ் தனது ட்விட்டர் பதிவில் "தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க???? " என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்திருக்கும் நடகர் சாந்தனு பாக்யராஜ் "நெபாட்டிசம் இங்கேயும் உள்ளது.. அதே குருபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்...தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள்" என பதிலளித்துள்ளார்".