“ஜோதிகாவின் வேகம் இன்னும் குறையவே இல்லை” - ராதாமோகன்

“ஜோதிகாவின் வேகம் இன்னும் குறையவே இல்லை” - ராதாமோகன்
“ஜோதிகாவின் வேகம் இன்னும் குறையவே இல்லை” - ராதாமோகன்
Published on

‘காற்றின் மொழி’படப்பிடிப்பின் அனுபவங்களை பற்றி இயக்குநர் ராதா மோகன் பகிர்ந்து கொண்டுள்ளார். 


பாலிவுட்டில் வித்யா பாலன் நடித்த ‘தும்ஹரி சுலு’படத்தினை தமிழில் ‘காற்றி மொழி’என்ற தலைப்பில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குநர் ராதா மோகன். இதில் வித்யா பாலன் நடித்த பாத்திரத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். அதன் படிப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.  

சென்னையில் பெரம்பூர் பக்கம் ஒரு பள்ளிக்கூட மைதானம். அங்கே குழந்தைகளுக்கான போட்டி. வாயில் ஸ்பூன். அதில் ஒரு எலுமிச்சை பழம். நிஜமாக ஒரு போட்டிக்கு காத்திருப்பதை போலவே நிற்கிறார் விஜயலக்ஷ்மி. யார் இந்த விஜயலக்ஷ்மி? அச்சு அசல் கேரக்டராகவே மாறி நிற்கிறார். வேறு யார், ஜோதிகாதான். அவரது வேகமும் சுறுசுறுப்பும் அவ்வளவு இயல்பாக இருக்கிறது. அது ‘காற்றின் மொழி’ ஷூட்டிங் ஸ்பாட். நாம் பார்ப்பது நிஜமான போட்டியில்லை.

ஆனால் அங்கே அத்தனையும் நிஜமான போட்டி அளவுக்கே நடக்கிறது. இயக்குநர் ராதா மோகன் பேச ஆரம்பிக்கிறார். ஒரு ‘கட்’ சொன்னவர் லேசாக சகஜநிலைக்கு வந்த பின் “நான் ஜோதிகாகூட பத்து வருஷம் கழிச்சு வேலை பார்க்குறேன். நான் ‘மொழி’படத்தின்போது அவரது நடிப்பை பார்த்து உண்மையில் பிரமித்தேன். அந்தளவுக்கு அவரது அர்ப்பணிப்பு இருந்தது. அவர் ஒவ்வொரு காட்சியையும் நடித்து முடித்த பின்னால் கம்ப்யூட்டர் திரையில் பார்ப்பார். அவரது தோற்றம் அழுத்தமாக பதிந்திருக்கும். இப்போது பல வருஷமாகிவிட்டது. நான் அதே வேகத்தையும் அதே புத்துணர்வையும் ஜோதிகாவிடம் பார்க்கிறேன்” என்கிறார் ராதா மோகன். 

ஜோதிகா பாத்திரம் எப்படி?
“விஜயலக்ஷ்மி மிக அன்பான பாத்திரம். இந்தக் கதாப்பாத்திரம் எல்லா பெண்களையும் பிரதிபலிக்கும்படி இருக்கும். பல பெண்கள் திறமையானவர்களாக இருப்பார்கள். ஆனால் வெளிப்படுத்த முடியாது. இந்தக் கதையில் விதார்த் தான் ஜோதிகாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். விதார்த்தின் பாத்திரம்தான் கதையின் முதுகெலும்பு. அவரது பாத்திரத்தின் பெயர், பாலு. இவர் இல்லையென்றால் கதை நிறைவடையாது” என்கிறார் ராதா மோகன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com