'சேரன் பாண்டியன்’, 'நாட்டாமை' பட கதாசிரியர் ஈரோடு செளந்தர் மரணம்!

'சேரன் பாண்டியன்’, 'நாட்டாமை' பட கதாசிரியர் ஈரோடு செளந்தர் மரணம்!
'சேரன் பாண்டியன்’, 'நாட்டாமை' பட கதாசிரியர் ஈரோடு செளந்தர் மரணம்!
Published on

இயக்குநரும் பிரபல கதாசிரியருமான ஈரோடு செளந்தர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இதனையொட்டி திரைத்துறையினர் இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

 ரஜினி, கமல்ஹாசன் என தமிழின் ஸ்டார் நடிகர்களை வைத்து இயக்கிய கே.எஸ் ரவிக்குமாரின் இரண்டாவது படம் சேரன் பாண்டியன். அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல, அவரது இயக்கத்தில் வெளியான ’நாட்டாமை’ வசூல் சாதனை செய்து அவரை முன்னணி இயக்குநராக்கியது.

இந்த இரண்டு படங்களுக்கும் கதை, வசனம் எழுதியவர்தான் இயக்குநர் ஈரோடு செளந்தர். இதுமட்டுமல்ல இதே கே.எஸ் ரவிக்குமாரின் பரம்பரை, சமுத்திரம் உள்ளிட்டப் படங்களுக்கும் கதை வசனம் இவரேதான். கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ’முதல் சீதனம்’, 1998 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சிம்மராசி’ படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் ஈரோடு செளந்தர். முதல் சீதனம் படத்தில் வரும் ‘எட்டு மடிப்பு சேலை’ பாடல் இப்போதும் கிராமங்களில் ஒலிக்கப்படும் சூப்பர் ஹிட் காதல் சோகக்கீதம்.

இவர் கதை வசனம் எழுதியப் படங்களும் இயக்கிய படங்களும் முழுக்க முழுக்க குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளாகத்தான் இருந்திருகின்றன. அதனாலேயே, சேரன் பாண்டியன், நாட்டமை படத்தின் சிறந்த கதைக்காகவும், சிம்மராசி படத்தின் வசனத்திற்காகவும் தமிழக அரசு விருது கொடுத்து கெளரவித்தது.

கடந்த வருடம்தான் தனது பேரன் கமலேஷை வைத்து ‘அய்யா உள்ளேன் அய்யா’ படத்தை இயக்கியிருந்தார். இதில், அவரது இயக்குநர் கே.எஸ் ரவிக்குமாரும் நடித்து நட்புக்கு மரியாதை செய்தார் என்பது  குறிப்பிடத்தக்கது. இவர், கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய கமல்ஹாசனின் தசாவதாரம், ரஜினியின் லிங்கா படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறுநீரக பாதிப்பு காரணமாக இயக்குநர் ஈரோடு செளந்தர் இன்று மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 63. ஈரோடு சௌந்தரின் மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com