என் சோலோவை கொன்றுவிடாதீர்கள்: கெஞ்சுகிறார் துல்கர் சல்மான்

என் சோலோவை கொன்றுவிடாதீர்கள்: கெஞ்சுகிறார் துல்கர் சல்மான்
என் சோலோவை கொன்றுவிடாதீர்கள்: கெஞ்சுகிறார் துல்கர் சல்மான்
Published on

நான் கெஞ்சிக் கேட்கிறேன், என் சோலோவை கொன்றுவிடாதீர்கள் என்று துல்கர் சல்மான் தனது ஃபேபுக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என் கேரியரில் மிகப் பெரிய படம் சோலோ என்று கூறியிருந்தார் துல்கர். அந்தப் படம் கடந்த வாரம் மலையாளம் மற்றும் தமிழில் திரைக்கு வந்தது. மூன்று கதை பின்னணிகளை கொண்ட புதிய வடிவத்தில் இதன் கதையை வடிவமைத்திருந்தார் இயக்குநர் பிஜோய் நம்பியார். சில உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் இடம்பெற்ற சில  முடிவுகள் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் படம் ரிலீஸுக்கு பின் இயக்குனரின் அனுமதி இல்லாமல் தயாரிப்பு நிறுவனமே களத்தில் இறங்கி க்ளைமாக்சில் சில மாற்றங்களைச் செய்தது. 
இந்நிலையில் இது குறித்து துல்கர் சல்மான், 'கெஞ்சிக் கேட்கிறேன் சோலோவை கொன்றுவிடாதீர்கள்' என்று தனது ஃபேஸ்புக்கில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அரை பக்கத்திற்கு அவரது ஆதங்கம் நீள்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை எடுப்பதற்காக நாங்கள் எங்கள் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைத்திருக்கிறோம். இதில் ஏன் நடித்தீர்கள் என என்னிடமே கேட்கிறார்கள். அது வித்தியாசமாக இருந்ததால்தான் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன், நிஜத்தில் நடந்த நிகழ்வுகள் அடிப்படையில் பல விஷயங்கள் உள்ளன. அதை யாரும் தவறாகப் பேசவேண்டாம். அனைத்திலும் வித்தியாசத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள், அப்படி ஏதாவது முயற்சியை மேற்கொண்டால் அதை  ஊக்கமளிக்காவிட்டாலும் பரவாயில்லை அந்த முயற்சியை கொச்சைபடுத்தாமல் அதை கடந்து போகலாமே. மலையாள சினிமா வரலாற்றில் இயக்குனரின் அனுமதி  பெறாமல் படம் வெளியான பிறகு அதை வெட்டி ஒட்டி வெளியிடுவது இதுவே முதன்முறையாக இருக்கும். இதுவும் ஒருவகையில் படத்தைக் கொல்வது போலத்தான் என்று வருந்தி எழுதியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com