‘மன்னிப்பு கேட்காவிட்டால்...’ ரைசாவுக்கு மருத்துவர் பைரவி செந்தில் வக்கீல் நோட்டீஸ்

‘மன்னிப்பு கேட்காவிட்டால்...’ ரைசாவுக்கு மருத்துவர் பைரவி செந்தில் வக்கீல் நோட்டீஸ்
‘மன்னிப்பு கேட்காவிட்டால்...’ ரைசாவுக்கு மருத்துவர் பைரவி செந்தில் வக்கீல் நோட்டீஸ்
Published on

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசாவுக்கு மருத்துவர் பைரவி செந்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவர் பைரவி செந்திலிடம் நடிகை ரைசா வில்சன் முகப்பொலிவு சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன்பின்னர் அவர் கண்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டதாக புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். தனக்கு ஏற்பட்ட விளைவுகளுக்கு தவறான சிகிச்சையே காரணம் என்பதால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி ரைசா வில்சன், மருத்துவர் பைரவி செந்திலுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிருந்தார்.

இந்நிலையில், மருத்துவர் பைரவி செந்திலும் அவரது வழக்கறிஞர் ஆர். நாகேஷ்வரராவ் மூலமாக, நடிகை ரைசா வில்சனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், தோல் ஆரோக்கியம், முகப்பொலிவுக்காக தன்னை அணுகியபோது, சிகிச்சைக்கு ஒத்துக்கொள்வதாக தானாக முன்வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக குறிப்பிட்டுள்ளார். ரைசாவிற்கு ஏற்பட்டுள்ளது பயப்படக்கூடிய பக்கவிளைவுகள் இல்லை என்றும், அரிதாக ஏற்படக்கூடிய விளைவுதான் என்றும், இயற்கையாகவே குணமடையக்கூடிய ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தீடீரென சிகிச்சை குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறான கருத்துக்களை அவர் வெளியிட்டு வருவதாகவும், மற்ற வாடிக்கையாளர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் ரைசாவின் செயல் உள்ளதாகவும், மக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயரை சீர்குலைக்கும் நோக்கில் ரைசா நாடகம் ஆடுவதாகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்

இந்த விவகாரத்தை மேற்கோள்காட்டி ஏராளமான வாடிக்கையாளர்கள் கேட்பதால் உளவியல் ரீதியாக பாதிக்கப் படைந்துள்ளதாகவும், மூன்று நாட்களில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ரைசா வில்சனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மன்னிப்பு கோரி அதை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் எனவும், மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பைரவி செந்திலின் வழக்கறிஞர் ஆர். நாகேஷ்வர ராவ் தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com