ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் குத்து ரம்யா ஒரு காட்டூனை வெளியிட்டுள்ளார்.
தமிழில் குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் குத்து ரம்யா. ஆனால் அவரை அந்தப் பெயரில் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. கர்நாடகாவில் அவரை திவ்யா ஸ்பாண்டனா என குறிப்பிட்டால்தான் தெரியும். நடிகையான அவர் இப்போது முழு நேர அரசியல்வாதி. தற்சமயம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடக பிரிவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவர் ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்து ஒரு காட்டூனை வெளியிட்டுள்ளார். அதற்கு ’காமன் மேன் வெயிட்டிங் ஃபார் அச்சே தின்’ என தலைப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் நல்ல நாளுக்காக ஒரு சாமான்யன் காத்துக் கொண்டிருக்கிறான் என்பது பொருள். அந்த கார்ட்டூனில் முதலில் பண வீக்கம் என்ற சின்ன மலையைக் காட்டி சாமான்யனை அரசு ஏற சொல்கிறது. அடுத்து பண மதிப்பு நீக்கம் என்ற மலையைக் காட்டி ஏற சொல்கிறார்கள். அடுத்து ஜிஎஸ்டி என்ற மலையைக் காட்டி ஏற சொல்கிறார்கள். சின்ன மலைதானே என சாமான்யனும் தொடர்ந்து ஏறுகிறான். இறுதியில் தான் உண்மை தெரிகிறது. அந்த மலையின் உச்சியில் நாம் இல்லை. இன்னும் ஏற வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்று. ஆக இந்த காட்டூன் மூலம் மோடியின் முழு திட்டத்தையும் திவ்யா கிண்டலடித்திருக்கிறார்.