“திஷா சாலியன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை”- பிரேத பரிசோதனையில் தகவல்

“திஷா சாலியன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை”- பிரேத பரிசோதனையில் தகவல்
“திஷா சாலியன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை”- பிரேத பரிசோதனையில் தகவல்
Published on

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின், மேலாளராக இருந்த திஷா சாலியன் இறப்பு விவகாரத்தில் வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியியல் துன்புறுத்துதலுக்கு உள்ளாக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.எஸ். தோனி படம் மூலம் பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சில நாட்களுக்கு முன்னர், அவரின் மேலாளராக இருந்த திஷா சாலியன்  வீட்டுப் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த தற்கொலைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

திஷா பாலியியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இதில் ஒரு இளம் அமைச்சரை காப்பாற்ற அரசு முயற்சி நடைபெறுகிறது என்றும் சிலர் மறைமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்

.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் திஷா பாலியியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் வெளிவந்த தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com