இயக்குனர் விஜய் 2 வது திருமணம்: டாக்டரை மணக்கிறார்

இயக்குனர் விஜய் 2 வது திருமணம்: டாக்டரை மணக்கிறார்
இயக்குனர் விஜய் 2 வது திருமணம்: டாக்டரை மணக்கிறார்
Published on

இயக்குனர் விஜய், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். அவர் டாக்டரை மணக்கிறார்.

சினிமா தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இரண்டாவது மகன், விஜய். அஜித்தின் ‘கிரீடம்’ படம் மூலம் டைரக்டராக அறிமுக மான இவர், தொடர்ந்து, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வ திருமகள்’,’தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ உட் பட சில படங்களை இயக்கினார். இப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை ’தலைவி’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார்.

இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ படங்களில் ஹீரோயினாக நடித்த அமலாபாலை காதலித்து, 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

விவாகரத்துக்குப்பிறகு படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். இந்நிலையில் இயக்குனர் விஜய், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள் மருத்துவர் ஐஸ்வர்யாவை அவர் திருமணம் செய்கிறார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் 11-ஆம் தேதி, சென்னையில் நடக்க இருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com