லீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் !

லீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் !
லீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் !
Published on

கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன் புகாரளித்துள்ளார். 'திருட்டுப் பயலே', 'கந்தசாமி' ஆகிய பிரபல படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் மீது கவிஞரும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டரில் மீடூ இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பேசு பொருளாக மாறி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் கவிஞர் லீனா மணிமேகலை, பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு லீனா மணிமேகலை தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்த பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதை இப்போது ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து, தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது இயக்குநர் சுசி கணேசன் என குறிப்பிட்டு பகிர்ந்தார். 

லீனா மணிமேகலை நீண்ட பதிவொன்றை அதில் எழுதியிருந்தார். இத்தகைய குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குநர் சுசி கணேசன் அந்தக் குற்றச்சாட்டுக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லீனா மணிமேகலைக்கு பதிலளித்துள்ளார். அதில்  கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம் , வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்" என காட்டமாக எழுதியுள்ளார். 

இதனைதொடர்ந்து இன்று கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். மேலும் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com