இயக்குனர் சுசீந்திரன் நடிகரானது எப்படி?

இயக்குனர் சுசீந்திரன் நடிகரானது எப்படி?
இயக்குனர் சுசீந்திரன் நடிகரானது எப்படி?
Published on

இயக்குனர்கள் நடிகர் அவதாரம் எடுக்கும் வரிசையில் அடுத்ததாக களமிறங்குகிறார் இயக்குனர் சுசீந்திரன்.

’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா அடுத்து இயக்கும் படம், ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இதை 'கல்பதரு பிக்சர்ஸ்' சார்பில் பி.கே. ராம் மோகன் தயாரிக்கிறார். இதில் இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஜனவரியில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது.

படம் பற்றி இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா கூறும்போது, ‘இது திரில்லர் படம். பல உண்மை சம்பவக் கதைகள் இதில் இடம்பெறுகிறது. விக்ராந்த், சுசீந்திரன் இருவரும்  தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் பணியில் இருக்கும் போது ஒரு திகில் 'கிரைம்' நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கிறார். திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சுசீந்திரன் தற்செயலாக இப்படி ஒரு கதை, நடிக்க வேண்டும் என்று கேட்டேன். கதையை கேட்டதும் உடனடியாக நடிக்க சம்மதித்தார்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com