வருத்தம் தெரிவித்த ஷங்கர்; புகாரை வாபஸ் பெற்ற பத்திரிகையாளர்கள்

வருத்தம் தெரிவித்த ஷங்கர்; புகாரை வாபஸ் பெற்ற பத்திரிகையாளர்கள்
வருத்தம் தெரிவித்த ஷங்கர்; புகாரை வாபஸ் பெற்ற பத்திரிகையாளர்கள்
Published on

சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த 2.0 படப்பிடிப்பின்போது பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இயக்குனர் ஷங்கர் வருத்தம் தெரிவித்தார்.

திருவல்லிக்கேணி ஈஸ்வர் தாஸ் தெருவில் நடந்த 2.0 படப்பிடிப்பில் புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்பட செய்தியாளர்கள் எஸ்.ஆர்.ரகுநாதன் மற்றும் பரத் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சென்னை ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் பத்திரிகையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கரின் உறவினர் பப்பு உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இச்சம்பவம் குறித்து பேட்டியளித்த இயக்குனர் ஷங்கர், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். இது தனக்கு தெரியாமல் நடந்துள்ளதாக கூறினார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்றும் அவர் உறுதியளித்தார். ஷங்கரின் வருத்தத்தை ஏற்றுக்கொண்ட பத்திரிகையாளர்கள், இதுதொடர்பான வழக்கைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com