தமிழ் திரையுலகத்தில் வரிவிலக்குக்காக, யு சான்றிதழ் பெற படக்குழுவினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில், தரமணி திரைப்படத்தின் இயக்குநர் ராம் அந்தப் படத்திற்கு 'ஏ' சான்றிதழைக் கேட்டுப் பெற்றுள்ளார்.
ராம் இயக்கியுள்ள 'தரமணி' படம், ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாகிறது. இதையொட்டி நாளிதழ்களில் வெளியான விளம்பரத்தில் ஆண் மது அருந்தினால் 'யு/ஏ' எனவும், பெண் மது அருந்தினால் 'ஏ' எனவும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
தணிக்கையில், தரமணி படத்தின் குறிப்பிட்ட ஒரு வசனத்தையும், 14 காட்சிகளையும் நீக்கினால் யு/ஏ சான்றிதழ் தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை மறுத்த இயக்குநர், இந்த திரைப்படம் 18 வயதை கடந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம் எனக் கூறி 'ஏ' சான்றிதழைக் கேட்டுப் பெற்றுள்ளார்.