பாடகியும் இயக்குநர் ராஜீவ் மேனனின் அம்மாவுமான கல்யாணி மேனன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
’மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ’சர்வம் தாளமயம்’ படங்களை இயக்கிய இயக்குநர் ராஜீவ் மேனனின் அம்மாவும் பிரபல பின்னணி பாடகியுமான கல்யாணி மேனன் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
மலையாளத்தில் அதிக பாடல்களைப் பாடியுள்ள கல்யாணி மேனன், ஷங்கரின் ‘காதலன்’ படத்தில் ’இந்திரையோ இவள் சுந்தரியோ’, ரஜினிகாந்த்தின் ‘முத்து’ படத்தில் சூப்பர் ஹிட் அடித்த 'குலுவாலிலே', ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இளைஞர்களின் ஃபேவரைட்டான 'ஓமணப் பெண்ணே', '96' படத்தில் அனைவரையும் காதலில் உருகவைத்த 'காதலே காதலே' உள்ளிட்ட தமிழ் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 80 வயதாகும் கல்யாணி மேனன் இன்று மதியம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். நாளை பெசன்ட் நகரிலுள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.