"நாங்கள் ஓடிடியை நாடியது ஏன்?" - காரணம் பகிரும் ஃபகத்தின் 'மாலிக்' பட இயக்குநர்

"நாங்கள் ஓடிடியை நாடியது ஏன்?" - காரணம் பகிரும் ஃபகத்தின் 'மாலிக்' பட இயக்குநர்
"நாங்கள் ஓடிடியை நாடியது ஏன்?" - காரணம் பகிரும் ஃபகத்தின் 'மாலிக்' பட இயக்குநர்
Published on

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள `மாலிக்' திரைப்படம் குறித்து விரிவாக பேசியிருக்கிறார் அதன் இயக்குநர் மகேஷ் நாராயணன். குறிப்பாக, ஓடிடி ரிலீஸின் பின்னணியை முழுமையாகச் சொல்லியிருக்கிறார்.

பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுவரும் திரைப்படம் 'மாலிக்'. சில ஆண்டுகள் முன் வெளியான 'டேக் ஆஃப்' திரைப்படம் மற்றும் கொரோனா லாக் டவுனின்போது வெளியான 'சி யூ ஸூன்' படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

மலையாளத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க, மலையாள திரைத்துறையில் இதுவரை இல்லாத அளவு பட்ஜெட்டில் படம் தயாராகியிருக்கிறது. முதலில் தியேட்டரில்தான் படம் வெளியாகவதாக இருந்தது. ஆனால், கொரோனா போன்ற சூழ்நிலைகளை காரணமாக ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து, திரைப்படம் குறித்து நிறைய விஷயங்களை 'டெக்கான் ஹெரல்ட்டு' தளத்துக்கு பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் மகேஷ் நாராயணன்.

''சில வருடங்கள் முன்பே நான் ஃபஹத்துடன் விவாதித்த முதல் படம் 'மாலிக்'. ஆனால் பட்ஜெட் சிக்கல்களால் அப்போது அது நிகழவில்லை. நான் வளர்ந்த பகுதிகளை மையப்படுத்தி, 1955 முதல் 2018 வரை உள்ளூர் அரசியலால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு சமூகக் கதைதான் இது. கடந்த ஆண்டு பிப்ரவரியே படத்தை வெளியிட திட்டமிட்டிருதோம். ஆனால், நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தள்ளிப்போனது. 18 மாதங்களுக்கும் மேலாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. ஒரு படத்தை இவ்வளவு நாட்கள் வைத்திருப்பது அர்த்தமல்ல. ஏனெனில் படத்தின் பட்ஜெட் அதிகம்.

தயாரிப்பாளர் போட்ட பணத்தை திரும்ப பெற வேண்டும். எனவேதான் இந்த முடிவை எடுத்தோம். இது ஒரு கூட்டு முடிவுதான். ஓடிடி தளங்களின் வளர்ச்சி எதிர்காலத்தில் தியேட்டர் கலாசாரத்தை மூடிவிடும் என்கிறார்கள் சிலர். அப்படி எதுவும் நடக்காது என்றே நினைக்கிறேன். இரண்டுமே வெவ்வேறு தளங்கள். எதிர்காலத்தில் இரண்டும் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கொரோனா முடிந்ததும் மீண்டும் இயல்புநிலை திரும்பியதும் வரவிருக்கும் ஆண்டுகளில் சினிமா துறையின் வளர்ச்சிக்கு இந்த இரண்டு தளங்களும் இணைந்து செயல்படுவது முக்கியமாக இருக்கும்" என்கிறார்.

தொடர்ந்து ஃபஹத்துடன் மூன்று முறையாக இணைந்துள்ளது குறித்து பேசியிருக்கும் மகேஷ் நாராயணன், ''ஃபஹத்தை எனக்கு நீண்ட காலமாக தெரியும். இயக்குநராவதற்கு முன்பு, எடிட்டராக பணியாற்றியதில் இருந்தே அவருடன் பழகிவந்துள்ளேன். நண்பர்களைப் போன்று ஒன்றாகவே நாங்கள் வளர்ந்தோம். இந்தப் படத்தில் வயதான கேரக்டரில் நடித்துள்ளார் ஃபஹத். இது அவர் இதற்கு முன் செய்யாத ஒன்று. சவாலான இந்த கதாபாத்திரத்துக்காக நிறைய உழைத்துள்ளார்" என்று பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com