ஒவ்வொரு இயக்குனருக்கும் கனவு படம் ஒன்று இருக்கும். இயக்குனர் மகேந்திரனுக்கும் அது இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை என்கிறார் ஆவணப்பட இயக்குனர் தினகரன் ஜெய்!
‘’எல்லா படைப்பாளிகளுக்கும் கனவு திரைப்படம் ஒன்று இருக்கும். இயக்குனர் மகேந்திரனுக்கும் அது இருந்தது. நான் அடிக்கடி அவரைச் சந் திப்பேன். அப்போது இதைத் தெரிந்துகொண்டேன். அவர் சிறுகதை எழுதுவதில் அலாதி பிரியம் கொண்டவர். கோவையில் இருந்து வெளி வரும் சிறு பத்திரிகை ஒன்று அவரிடம் சிறுகதை கேட்டிருந்தது.
கோவை நண்பர்கள், அவருக்கு தெரியாததால் மறுத்துவிட்டார். அந்த நண்பர்கள் என் மூலமாக, மகேந்திரனிடம் எழுதி வாங்கி தரச் சொன் னார்கள். அது விஷயமாக அவரை சந்தித்தபோதுதான் ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது நடேசன் என்ற ஈழத்து எழுத்தாளர் எழுதிய 'வண்ணாத்திக்குளம்' நாவலைப் படித்துக் கொண்டிருந்தார். அந்த நாவலுக்குத் திரைக்கதை எழுதும் பணியையும் வேகமாகச் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். கிட்டத்தட்ட அந்த நாவலுக்கான திரைக்கதை வடிவத்தை எழுதி முடித்துவிட்டார்.
சேரன், ஷாம், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை நடிக்க வைக்க வேண்டும் என்பது மகேந்திரனின் விருப்பம். நானும் அவரது ரசிகன் என்ற முறை யில் ஆவலாக இருந்தேன். ஆனால், அதற்குள் அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கலைஞனுக்கு அவனது கனவு படைப்புகள் ஈடேறாமல் போவது வருத்தம்தான்’’ என்கிறார்.