லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகிறது. சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, மன்சூர் அலிகான் என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் லியோ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் சிறப்புக் காட்சிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், “அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்” என்றும், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
லியோ திரைப்படத்திற்கான முன்பதிவு சில திரையரங்குகளில் தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் திரையரங்கை முற்றுகையிட்டு வருகின்றனர். முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள திரையங்குகளிலெல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனிடையே, லியோ படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 400, 500 முதல் 1000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது, உணவு பொருட்களுக்கும் சேர்த்து காம்பேக் டிக்கெட் என விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.
இந்நிலையில், படம் குறித்து ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதாவது, லியோ திரைப்படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளை தவறவிடாமல் கண்டிப்பாக பாருங்கள் என்றும் திரையரங்குக்குள் படம் தொடங்குவதற்கு முன்பே சென்று விடுங்கள் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். மேலும், முதல் 10 நிமிடத்திற்காக ஓராண்டுக்கு மேலாக ஆயிரக்கணக்கானோர் உழைத்திருப்பதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் கூறிய காணொளியை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். அதேசமயத்தில் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் முண்டாசுப்பட்டி. இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் திரைப்படம் ஒன்றில் நடித்திருப்பார். அத்திரைப்படத்திற்கான போஸ்டரில் முதல் 10 நிமிடங்களை தவறவிடாதீர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கும். அக்காணொளிகளையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இருப்பினும் ஒரு இயக்குநராக அவரது வேண்டுகோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு வருடகாலமாக கடினமான உழைப்பை மிகப்பெரிய பட்டாளமே கொட்டியிருப்பது அந்த திரைப்படத்தை முழுமையாக எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தானே.
இதற்கு முன்பு வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸின் போதும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனம் ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோளை விடுத்திருந்தார். இயக்குநர்கள் யாரே சொல்ல தயங்கும் ஒரு விஷயத்தை மிகவும் துணிச்சலாக முன் வைத்தார்.
அதாவது, ரசிகர்கள் அதிகாலை காட்சிகளுக்கு தூக்கத்தை விடுத்து செல்வதை விடுத்து தூங்கி எழுந்து மிகவும் புத்துணர்ச்சியுடன் படத்திற்கு செல்லுங்கள். கதையின் போது நிதானமாக கவனிக்கும் வகையில் இருக்கும் என்று வெளிப்படையாகவே கூறினார்.
படமும் அவர் கூறியது போல் வழக்கமான அவரது படங்களில் இருந்து மிகவும் யதார்த்தமாக இருந்தது. ஆனால், சிலர் அதனை சரியாக புரிந்து கொள்ளாமல் ட்ரோல் செய்தனர்.