"என் சுவர், என் உரிமை!" - அரசியல் கட்சியினரால் 'பாதிக்கப்பட்ட' கே.எஸ்.ரவிக்குமார்

"என் சுவர், என் உரிமை!" - அரசியல் கட்சியினரால் 'பாதிக்கப்பட்ட' கே.எஸ்.ரவிக்குமார்
"என் சுவர், என் உரிமை!" - அரசியல் கட்சியினரால் 'பாதிக்கப்பட்ட' கே.எஸ்.ரவிக்குமார்
Published on

தனது வீட்டின் சுவர்களில் கட்சியினர் விளம்பரங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது தொடர்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இரண்டு நாள்களாக வெளியிட்டு வரும் வீடியோக்கள், புதிய சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரும், தற்போது குணசித்திர நடிகராகவும் கவனம் ஈர்த்து வருபவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது மலையாள ரீமேக்கான 'கூகுள் குட்டப்பன்' என்ற படத்தை தயாரித்தும், அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். 'பிக்பாஸ்' புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்க, கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வியாழக்கிழமை தனது சமூக வலைதள பக்கத்தில் "எனக்கு ஒரு பிரச்னை" என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வீடியோவில், "உங்கள போல நானும் சராசரி இந்திய குடிமகன்தான். எல்லாருக்கும் இருக்க மாதிரி சொந்தமா வீடு கட்டணும்னு ஆசை, கனவு இருக்கும். எனக்கும் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு இருந்தது. எல்லோருக்கும் இருக்கும் கனவுதான் அது. அதன்படி அழகான வீடு கட்டினேன்.

அதுல சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தா ஒரு பிரச்னை. நம்ம என்ன கோழையா, எப்படி சைலன்டா இருக்க முடியும். எதிர்த்து கேள்வி கேட்டேன். பிரச்னை பெருசாகிருச்சு. என்ன பண்றதுன்னு புரியல. அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன். இதுதொடர்பாக விரைவில் அடுத்த வீடியோவில் பேசுவோம்" என்ற புதிரோடு முடித்திருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த சிலர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஏதோ பிரச்னை என்ற கமெண்டுகளை பதிவிட்டு ``நாங்கள் இருக்கிறோம்" என்று தைரியம் கூறாத தொடங்கிவிட்டனர். இன்னும் சிலர் படத்தின் புரொமோஷனுக்காக இப்படி பேசுகிறார் என்றனர். ஆனால் மீண்டும் இன்றும் ஒரு வீடியோவை ரவிக்குமார் பதிவிட்டு இருக்கிறார்.

இன்றைய வீடியோவில், ``நேத்து நான் பதிவிட்ட அந்த வீடியோவுக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. நான் ஒரு சொந்த வீடு கட்டுனா, அதை சுற்றி மதில் சுவர் கட்டுவோம் இல்லையா... அப்படி கட்டுன எனக்கு சொந்தமான அந்த மதில் சுவருல என்னை கேக்காம இந்த கட்சிக்காரங்க எல்லாம் வந்து ஆக்கிரமிப்பு செஞ்சா, அது எந்த விதத்துல நியாயம். `என் சுவர் என் உரிமை' என நான் தட்டிக்கேட்க போக பிரச்னையே ஆரம்பிச்சது. என்ன பிரச்னை, இவ்வளவு பிரசனையா மாறியது.. அந்த பிரச்சனையை எப்படி தீர்த்தோம் என்பதை சீக்கிரமே நான் உங்களுக்கு சொல்கிறேன். காண்பிக்கிறேன்" என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com