இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்
இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்
Published on

இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

சமீபகாலமாக கொரோனா பெருந்தொற்று காரணமாகவும், பல்வேறு உடல்நலப் பிரச்னைகளாலும் திரைத்துறையினர் பலரை நாம் இழந்துவருகிறோம். அந்த வரிசையில் இன்று காலை இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் காலமானார்.

தமிழில் கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா மற்றும் மகராசன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். பழம்பெரும் திரைப்பட இயக்குநரான இவருக்கு வயது 90. ரங்கராஜனின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய மகன் ஜி.என்.ஆர் குமரவேலனும் திரைப்பட இயக்குநர். இவர் வாஹா, யுவன் யுவதி, ஹரிதாஸ் மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை இயக்கியவர். இவர் தனது தந்தை மறைவுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ’’எனது தந்தை, எனது வழிகாட்டி, எனது அன்புக்குரியவர்... இன்று காலை 8.45க்கு காலமானார். எங்கள் குடும்பத்திற்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் தேவை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com