பேரிடரும் பெரியவர்களும் - 'பம்பாய் ரோஸ்' இயக்குநர் கீதாஞ்சலியின் புதிய குறும்படம்

பேரிடரும் பெரியவர்களும் - 'பம்பாய் ரோஸ்' இயக்குநர் கீதாஞ்சலியின் புதிய குறும்படம்
பேரிடரும் பெரியவர்களும் - 'பம்பாய் ரோஸ்' இயக்குநர் கீதாஞ்சலியின் புதிய குறும்படம்
Published on

'பாம்பே ரோஸ்' அனிமேஷன் படத்தின் இயக்குநர் கீதாஞ்சலி ராவ் இயக்கிய புதிய குறும்படம் ஒன்று லோகார்னோ திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. கொரோனா பேரிடரும் முதியோர் வாழ்வும்தான் இந்தக் குறும்படத்தின் மையம்.

'Tomorrow My Love' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குறும்படம், ஆகஸ்ட் 4 முதல் 14 வரை நடைபெறும் லோகார்னோ திரைப்பட விழாவில் திரையிட இருக்கிறது. இந்தப் படத்தின் அனிமேஷன் ஸ்டைல் மற்றும் கேரக்டர்கள், கீதாஞ்சலி ராவ் முதன்முதலாக இயக்கிய 'பிரிண்டட் ரெயின்போ' படத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி, தனது துணையை தக்கவைக்க விரும்பும் மூதாட்டியின் கணவர், ஒரு நாய் மற்றும் பூனை ஆகியவை இந்தப் படத்தின் கேரக்டர்களாக இடம்பெற்றுள்ளன.

இந்தப் படம் தொடர்பாக பேசியிருக்கும் கீதாஞ்சலி ராவ், ''எனது முந்தைய படமான 'பிரினடட் ரெயின்போ'வில் பயன்படுத்திய அதே பாணியை இதிலும் பயன்படுத்தியுள்ளேன். மிகவும் அடிப்படையாக அதேநேரம், ஏற்கெனவே பயன்படுத்திய தொழில்நுட்பத்தை கொண்டு எனது திரைப்படங்களை உருவாக்க ஆசைப்படுகிறேன். இதே பாணிதான் நான் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கும் பின்பற்றுகிறேன்.

நான் உருவாக்கிய வயதான பெண் கேரக்டர், அவருக்கு துணையாக வயதான ஆண் மற்றும் அவர்களின் நாய், பூனை என 'பிரின்டட் ரெயின்போ'வில் பயன்படுத்திய அதே கதாபாத்திரங்களை மீண்டும் பயன்படுத்தி இருக்கிறேன். அதே கதாபாத்திரங்கள்தான். ஆனால் அந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான கதையைச் சொல்கிறேன்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தூண்டப்பட்டு இந்தக் கதையை உருவாக்கினேன். 'பாம்பே ரோஸ்' படத்துக்கு பின்பு மற்றொரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். அந்த சமயத்தில் கொரோனா தொற்று நோய் பரவியது. இந்த தொற்றுநோயால் எனது புதிய பணிகளில் கவனம் செலுத்த போதுமான உத்வேகம் கிடைக்கவில்லை. ஏனென்றால் தொற்றுநோயால் பலர், குறிப்பாக வயதானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் என்னை வெகுவாக பாதித்தது. அந்தப் பாதிப்பே இந்த படமாக உருவானது" என்று விரிவாக பேசியிருக்கிறார்.

இயக்குநர் கீதாஞ்சலியின் கவனம் ஈர்த்த 'பாம்பே ரோஸ்' அனிமேஷன் படம் இங்கே...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com