"நீங்க ஒரு சிறந்த நடிகர்னு தெரியும்.. டைரக்டராகவும் மிரட்டிட்டீங்க!" - ராயனுக்காக தனுஷை புகழ்ந்த DK!

ராயன் படத்தை பார்த்திருக்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், சிறந்த இயக்கத்திற்காக டைரக்டராக தனுஷை பாராட்டி பேசியுள்ளார்.
dinesh karthik - dhanush
dinesh karthik - dhanushweb
Published on

நடிகர் தனுஷின் 25வது படமான வேலையில்லா பட்டதாரி ஹிட்டடித்து வசூலிலும் மிரட்டிய நிலையில், அவரின் 50வது படமான ராயன் திரைப்படமும் வசூல் ரீதியாகவும், மேக்கிங் ரீதியிலாகவும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்துள்ளது.

தன்னுடைய 50வது திரைப்படத்தை நடிகர் தனுஷே இயக்கி அவரே நடித்தும் இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில், தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்து திரையரங்கில் வெளியான ராயன் திரைப்படம் இதுவரை 150 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராயன்
ராயன்pt web

சில தினங்களுக்கு முன்பு ராயன் திரைப்படம் OTT-ல் வெளியான நிலையில், தனுஷின் அசுத்தரமான நடிப்பும், ’உசுரே நீதானே’ என உயிரை ஆட்டிவைத்த ரஹ்மானின் இசையையும் ஒடிடி தளத்திலும் ரசிகர்கள் பார்த்து ரசித்துவருகின்றனர்.

இதையும் படிக்கவும்: வலியை மீறி அம்மாவுக்காக உடைந்துபேசிய சிறுவன்.. கல்வி கட்டணம் முதல் வீட்டு சாமான்கள் வரை உதவிய விஜய்!

இந்நிலையில், ராயன் திரைப்படத்தை பார்த்திருக்கும் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ராயன் படத்தையும் தனுஷின் இயக்கத்தையும் பாராட்டியுள்ளார்.

dinesh karthik - dhanush
டாப் 5 உலக பணக்கார கிரிக்கெட் வீரர்கள்| முதலிடத்தில் இந்திய வீரர்.. ஆனால் தோனியோ, கோலியோ இல்லை!

டைரக்டராகவும் மிரட்டிட்டீங்க..

ராயன் திரைப்படத்தை பார்த்து பாராட்டி பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், ஒரு நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் நீங்கள் சிறந்தவர் என்று கூறியுள்ளார்.

ராயன் படம் குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் தினேஷ் கார்த்திக், “ ராயன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றாக இருந்தது தனுஷ், நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பது எப்போதும் எனக்கு தெரியும், ஆனால் ஒரு இயக்குநராகவும் மிரட்டிவிட்டீர்கள். இன்னும் நிறைய நல்ல படங்களை கொடுக்க வாழ்த்துகிறேன்” என்று பாராட்டியுள்ளார்.

dinesh karthik - dhanush
"சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான மிகப்பெரிய கேள்வி.." - ’கொட்டுக்காளி’-யை பாராட்டி தள்ளிய சீமான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com