பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான், 'ஜுராசிக் வேர்ல்ட்', 'தி ஜங்கிள் புக்', ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’, 'லைஃப் ஆஃப் பை', ’ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் இந்தி படம் ஒன்றிற்காக கிறிஸ்டபர் நோலனின் இண்டர்ஸ்டெல்லர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தார் இர்ஃபான். அந்த நிகழ்வை இன்று பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
தனக்கான ஒரு பாணியை வகுத்து திரைக்கதையில் மாயங்கள் நிகழ்த்துபவர் இயக்குநர் கிறிஸ்டபர் நோலன். தலைசிறந்த இயக்குநரான இவரது படங்களில் வாய்ப்பு கிடைக்க பலரும் ஏங்கிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தும், இந்தி படத்திற்காக வாய்ப்பை வேண்டாமென்று கூறினார். கிறிஸ்டபர் நோலன் இயக்கிய இண்டர்ஸ்டெல்லர் திரைப்படம் உலகம் முழுவதும் அமோக வரவேற்பை பெற்றது.
இயற்பியல், வானியல். அப்பா-மகள் பாசம் என பல விஷயங்கள் அந்தப்படத்தில் பேசப்பட்டு இருக்கும். 2016-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிக்க இந்தி நடிகர் இர்ஃபான் கானுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அதே நேரம் இந்தியில் லஞ்ச் பாக்ஸ், டி டே ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்தா இர்ஃபான்கான். உலகின் தலைசிறந்த இயக்குநரின் படத்தில் வாய்ப்பு வந்துவிட்டாலும் தான் ஒத்துக்கொண்ட திரைப்படங்களை முடிக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் வாய்ப்பை இர்ஃபான் நிராகரித்தார்.
இது குறித்து பேசிய இர்ஃபான், எனக்கு தெரியும் இது கிறிஸ்டபர் நோலன் திரைப்படம். நோலன் படத்தில் நடிக்க நான் 4 மாதங்கள் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்ற நிலை. ஆனால் இந்தியில் லஞ்ச் பாக்ஸ், டி டே திரைப்படங்களில் நடிக்க வேண்டி இருந்தது. அதனால் அந்த வாய்ப்பை நிராகரித்தேன் எனத் தெரிவித்தார்.