ரூ.40 கோடி தருவதாகச் சொல்லியும் இந்தியை நிராகரித்த விஜய் தேவரகொண்டா!

ரூ.40 கோடி தருவதாகச் சொல்லியும் இந்தியை நிராகரித்த விஜய் தேவரகொண்டா!
ரூ.40 கோடி தருவதாகச் சொல்லியும் இந்தியை நிராகரித்த விஜய் தேவரகொண்டா!
Published on

இந்தியில் அறிமுகமாவதற்கு ரூ.40 கோடி சம்பளம் தருவதாகக் கூறியும் விஜய் தேவரகொண்டா மறுத்த செய்தி இப்போது வெளியாகியுள்ளது. 

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, ஸ்ருதி ராமச்சந்திரன், சாருஹாசன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’டியர் காம்ரேட்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதன் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் ரூ. 6 கோடிக்கு பெற்றுள்ளார்.

 இந்தியிலும் விஜய் தேவரகொண்டாவையே நடிக்க கேட்டார். ஆனால், அவர்  மறுத்துவிட்டார். இதையடுத்து இஷான் கட்டார், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தி ரீமேக்கில் நடிக்காதது ஏன் என்று விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டபோது, ‘’நான் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். இந்தி பட ஹீரோ என்ற பெயர் எனக்கு வேண்டாம். அதோடு ஒரே கதை இரண்டு முறை சொல்லப்படும்போது, அதில் நடிக்க விருப்பம் இல்லை.

 இந்தப் படத்துக்காக அதிக எனர்ஜியை கொடுத்து, நடித்திருக்கிறேன். அதையே திரும்ப செய்வதில் விருப்பம் இல்லை. எல்லாம் தெரிந்த காட்சிகள் என்பதால் அதில் மீண்டும் ஆறு மாதம் செலவழிக்க விரும்பவில்லை’’ என்று கூறியிருந்தார் தேவரகொண்டா.

இந்நிலையில், இந்தியில் விஜய் தேவரகொண்டா அறிமுகமாக, ரூ.40 கோடி சம்பளம் தருவாக கரண் ஜோஹர் கூறியும் அதை அவர் மறுத்துள்ள செய்தி இப்போது வெளியாகியுள்ளது. இதை அவர் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இந்த செய்தி பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதே போல ’அர்ஜூன் ரெட்டி’ இந்தி ரீமேக்கிலும் விஜய் தேவரகொண்டாவையே நடிக்க வைக்க கேட்கப்பட்டது. அப்போதும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து ஷாகித் கபூர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com