அமேசான் பிரைமில் வெளியாகும் 'கர்ணன்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு

அமேசான் பிரைமில் வெளியாகும் 'கர்ணன்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு

அமேசான் பிரைமில் வெளியாகும் 'கர்ணன்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிப்பெற்ற "கர்ணன்" திரைப்படம் அமேசான் பிரைமில் மே 9 ஆம் தேதி வெளியாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் திரையரங்குகளில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியானது கர்ணன் திரைப்படம். சந்தேஷ் நாராயணனின் உயிரோட்டமான இசையும், தனுஷின் பக்குவமான நடிப்பும், மாரி செல்வராஜின் அற்புதமான திரைக் கதையும், தேனி ஈஸ்வரின் அழகியலும், வாழ்வியலும் கொண்ட ஒளிப்பதிவும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு செய்தது. இத்திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நேற்று முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் கர்ணன் திரைப்டத்தை தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் மே 9 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு திரைப்படம் 30 நாள்கள் தியேட்டரில் வெளியான பின்பு ஒடிடியில் வெளிடலாம் என்ற விதிமுறையை பின்பற்றி மே 9 ஆம் தேதி அமேசானில் வருகிறான் கர்ணன்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com