தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சிம்பு: அட்வைஸ் சொன்ன நடிகர் விவேக்

தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சிம்பு: அட்வைஸ் சொன்ன நடிகர் விவேக்
தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சிம்பு: அட்வைஸ் சொன்ன நடிகர் விவேக்
Published on

தனது ரசிகர் மறைவுக்காக நடு ராத்திரியில் போஸ்டர் ஒட்டிய சிம்புவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா நடிகர்களில் சிம்பு கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் மனதிற்கு என்ன படுகிறதோ அதை வெளிப்படையாக செய்பவர். சில நாள்கள் முன்பு சிம்புவின் ரசிகர் மன்ற நிர்வாகியான மதன் என்பவர் மறைந்தார். அவரது இறப்பை தெரிவிக்கும் விதத்தில் அவரது நண்பர்கள் தெருக்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த நடிகர் சிம்பு அதனை தற்செயலாக கவனித்து இருக்கிறார். உடனே காரை நிறுத்த சொல்லிய சிம்பு, மன்ற நிர்வாகிகள் ஒட்டிக் கொண்டிருந்த போஸ்டரை வாங்கி தானும் ஒட்டத் தொடங்கியுள்ளார். 

சிம்புவின் இச்செயலைக் கண்டு அசந்துபோன அவரது ரசிகர்கள் உடனே மொபைல் போனில் புகைப்படங்களை எடுத்துள்ளனர். அந்தப் படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அப்படங்கள் இப்போது வைரலாக பரவி வருகிறது. சிம்புவின் இந்தச் செயலைக் கண்டு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்தச் சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

சிம்பும், தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை என பலரும் அவர் மீது புகார் தெரிவித்து வருகின்றன. அதனை குறிப்பிட்டு சொல்லும் வகையில்தான் விவேக் இதனை குறிபிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com