பி.வி.சிந்துவாக நடிக்க யார் பெஸ்ட்?

பி.வி.சிந்துவாக நடிக்க யார் பெஸ்ட்?
பி.வி.சிந்துவாக நடிக்க யார் பெஸ்ட்?
Published on

பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கை சினிமாவாகிறது. இதை, அருந்ததி, ஒஸ்தி உட்பட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். படத்துக்கு சிந்து என டைட்டில் வைத்துள்ளனர். இதில் சிந்துவாக நடிக்க, சில நடிகைகளிடம் பேச உள்ளனர். தீபிகா படுகோன் பெயர் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது பற்றி பி.வி.சிந்து கூறும்போது, ’8 வயதில் இருந்தே கடுமையாக உழைத்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமும் முக்கியமானதுதான். பாலிவுட்டில் திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். எனது வாழ்க்கை கதையில், யார் நடிக்க வேண்டும் என்பதை சோனு சூட்தான் முடிவு செய்வார்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com