“விஜய் 66’ படத்திற்கு நடிகர் பிரபுதேவா நடனம் அமைக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
’பீஸ்ட்’ நெல்சன் படத்தை முடித்துவிட்டு விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் ‘விஜய் 66’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான, அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியானது. தற்போது, பீஸ்ட் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருவதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘விஜய் 66’ படப்பிடிப்பு துவங்கவுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில், ‘விஜய் 66’ படத்திற்கு பிரபுதேவா இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் முதன் முறையாக இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் என்பதால் வித்தியாசமான நடனத்தை கொடுக்குமாறு விஜய் பிரபுதேவாவிடம் கேட்டுள்ளார். ஏனென்றால், தெலுங்கில் அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுமே நடனத்தில் தெறிக்கவிடுபவர்கள். தெலுங்கு ரசிகர்களும் வித்தியாசமான நடனத்தை விரும்புபவர்கள். அதனால்தான், விஜய் இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.