"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?" - மைக்கேல் வாகனுக்கு அமுதன் கேள்வி!

"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?" - மைக்கேல் வாகனுக்கு அமுதன் கேள்வி!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?" - மைக்கேல் வாகனுக்கு அமுதன் கேள்வி!
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியானா தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரியானா, "இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, சச்சின் டெண்டுல்கர் உட்பட பல இந்திய பிரபலங்கள் இந்தியாவின் இறையாண்மையில் வெளிநாட்டினர் தலையிட வேண்டாம் என்கிற ரீதியில் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டனர். இந்த விவகாரம்தான் இரண்டு நாட்களாக இந்தியாவில் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, இதே கருத்தை கிண்டலடிக்கும் வகையில், 'தமிழ்ப் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன் ஒரு பதிவிட்டுள்ளார்.

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடங்கியது. இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடாதது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ``குல்தீப்பை இந்திய அணியில் சேர்க்காதது அபத்தமான முடிவு. அவரை எப்போது அணியில் சேர்க்கப் போகிறீர்கள்" என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

இதனை டேக் செய்த 'தமிழ்ப் படம்' இயக்குனர் சி.எஸ்.அமுதன், ``எங்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட நீங்கள் யார்? எங்கள் தேசத்தின் இறையாண்மையை ஒருபோதும் சமரசம் செய்ய விடமாட்டோம்" என்று கிண்டலாக பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com