இறையாண்மைய சீர்குலைக்க முயற்சி என விஜய் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசில் புகார்

இறையாண்மைய சீர்குலைக்க முயற்சி என விஜய் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசில் புகார்
இறையாண்மைய சீர்குலைக்க முயற்சி என விஜய் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசில் புகார்
Published on

அன்னிய சக்திகளின் தூண்டுதலின் பேரில் இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் மெர்சல் படத்தில் கருத்துத் தெரிவித்த நடிகர் விஜய் உள்ளிட்ட10 பேர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பர் இந்த புகாரை அளித்துள்ளார். அந்த மனுவில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் வழிபாட்டு தளங்கள் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசி உள்ளதாகவும், மத்திய அரசின் கொள்ளை முடிவான ஜிஎஸ்டி வரி குறித்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், அயல்நாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் இந்தியாவில் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததற்காக நடிகர் விஜய், சமந்தா, இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் முரளி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com