"என் பிறந்தநாள் கேக் வெட்டாமலேயே போய்விட்டான்!" - மகனை இழந்த காமெடி நடிகர் ராஜீவ் உருக்கம்

"என் பிறந்தநாள் கேக் வெட்டாமலேயே போய்விட்டான்!" - மகனை இழந்த காமெடி நடிகர் ராஜீவ் உருக்கம்
"என் பிறந்தநாள் கேக் வெட்டாமலேயே போய்விட்டான்!" - மகனை இழந்த காமெடி நடிகர் ராஜீவ் உருக்கம்
Published on

பிரபல இந்தி சின்னத்திரைக் காமெடி நடிகர் ராஜீவ் நிகாம் தன் பிறந்தநாள் அன்று தன்னுடைய மகனை இழந்தச் சம்பவத்தை உருக்கத்துடன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

இந்தி சின்னத்திரை காமெடி நடிகர் ராஜீவ் நிகாம். டிவி ஸ்டேன்ட் அப் காமெடி சீரியஸான 'ஹர் ஷாக் பெ உலு' தொடர்களில் நடித்து பிரபலமானவர். தனித்துவமான நகைசுவைத் திறனால் ரசிகர்கள் மத்தியில் வெகு சீக்கிரத்தில் இடம்பிடித்தவர்.

இவர் ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தான் சிரிக்கவைத்த ரசிகர்களுக்கு சோகமான செய்தியை பதிவிட்டார். அவரின் மகன் இறந்த செய்திதான் அது. அதுவும் ராஜீவ் நிகாம் பிறந்த நாள் நேற்று. பிறந்த நாள் அன்று அவரின் மகன் தேவராஜ் உயிரிழந்தது நிகாமுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதனையடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மகன் தேவராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, ``என் மகன் தேவ்ராஜ் தனது பரலோக வாசஸ்தலத்திற்கு புறப்பட்டான். என் பிறந்தநாள் கேக் கூட வெட்டாமல் போய்விட்டான். இத்தகைய பரிசை யார் தருகிறார்கள்?" என்று உருக்கமாக தனது வேதனையை பதிவிட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, அதாவது 2018 மே மாதம் தனது மகன் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக ராஜீவ் நிகாம் தெரிவித்தார். எனினும் மகன் உடல்நிலைக்கு என்ன நேர்ந்தது என்பது போன்ற விவரங்கள் எதையும் அவர் பகிரவில்லை.

ஆனால் நிகாமுடன் நெருக்கமாக இருந்த செய்தியாளர் ஒருவர், ``நிகாம் மகன் தேவராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் விளையாட சென்று வீடு திரும்பிய பிறகு அவனின் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது மகன் கோமா நிலைக்குச் சென்றபின் ராஜீவின் வாழ்க்கை ஒரு கடுமையான திருப்பத்தை சந்தித்தது. இந்த சோகத்துக்கு மத்தியிலும் ``ஹர் ஷாக் பெ உலு'' படப்பிடிப்பை சிரமத்துடன் முடித்து மக்களை சிரிக்க வைத்து கொண்டிருந்தார் ராஜீவ் நிகாம். அவர் தனது இந்த வெற்றிகரமான வாழ்க்கையை விட்டுவிட்டு, தனது குடும்பத்தின்மீது கவனம் செலுத்த முடிவு செய்து, மகனை கவனித்துக்கொள்வதற்காக தனது சொந்த ஊருக்கு திரும்பினார்" என்று பதிவிட்டுள்ளார்.

அந்தச் செய்தியாளர் குறிப்பிட்டது போல், அவரின் மகன் கோமா நிலையில் இருந்தபோதுதான் ராஜீவ் நடித்த ஷோ மிக பிரபலமாகி மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றார். ராஜீவ்க்கு இந்த ஆண்டு சோகமான ஆண்டு எனலாம். இதே ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தான் அவரின் தந்தை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com