புத்திசாலி கிரிமினல்னாலும் தடயம் விட்டுதான் போவான்: மகிழ் திருமேனி

புத்திசாலி கிரிமினல்னாலும் தடயம் விட்டுதான் போவான்: மகிழ் திருமேனி
புத்திசாலி கிரிமினல்னாலும் தடயம் விட்டுதான் போவான்: மகிழ் திருமேனி
Published on

அருண் விஜய் நடித்த, ’தடையறத் தாக்க’, ஆர்யா நடித்த ’மீகாமன்’ படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. இவர் இப்போது இயக்கும் படம், ’தடம்’. இதில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் பற்றி மகிழ் திருமேனி கூறும்போது, ‘இது த்ரில்லர் கதையை கொண்ட படம். எவ்வளவு புத்திசாலியா இருந்தாலும் எல்லா கிரிமினல்களும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டே செல்கிறார்கள். எது தடயம் என்பதை கண்டுபிடிப்பதும் அது, குற்றத்தைக் கண்டுபிடிக்க எப்படி பயன்படுது என்பதுதான் விசாரணையின் மையம். அப்படி ஒரு தடயத்தைப் பின்பற்றி நடக்கும் விசாரணைதான், ’தடம்’ படத்தோட கதை. இதில் அருண் விஜய் முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறார். இந்த தலைமுறை நடிகர்களில் அவர் சிறந்த நடிகர். அதுக்கு பல படங்களை உதாரணமா சொல்ல முடியும். இந்தப் படமும் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும். தற்போது படப்பிடிப்பு நடந்து வருது. இது சின்ன ஷெட்யூல். 5-ம் தேதி வரை படப்பிடிப்பு நடக்கும்’ என்ற அவரிடம், ‘மீகாமன் படத்துக்குப் பிறகு அடுத்த படம் இயக்க, ஏன் இவ்வளவு காலதாமதம்?’ என்று கேட்டோம்.
‘இது நானா ஏற்படுத்திக்கிட்ட தாமதம்தான். பொதுவா ஒரு கதையை எடுத்துக்கிட்டா, அதுக்காக சில ஆய்வுகளை மேற்கொள்வது என் வழக்கம். இந்தக் கதைக்காக கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. இதுக்கு இடையில சில படங்களை இயக்க வாய்ப்பு வந்ததும் உண்மைதான். ஆனா, இந்த கதை ஆய்வுக்காக, அதை ஏற்கலை. அதனால இந்த தாமதம்னு எடுத்துக்கலாம்’ என்றார் மகிழ் திருமேனி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com