பேட்மேன் என்ற படத்தையொட்டி ட்ரெண்ட்டாகிவரும் ‘பேட்மேன் சேலஞ்ஜில்’ திரைப்பிரபலங்கள் பலரும் நாப்கின்களுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அக்ஷய்குமார் நடிப்பில் தமிழகத்தை சேர்ந்த சாதனை மனிதர் அருணாச்சலம் முருகானந்தம் கதையை கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘பேட்மேன்’. மாதவிடாய் காலத்தின்போது பெண்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் நாப்கின்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பெண்களுக்கு சுகாதாரத்தை அளிக்கும் நாப்கின்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் ‘பேட்மேன் சேலஞ்ஜ்’ என்பதை ட்ரெண்டாக்கியுள்ளனர். அதன்படி திரைப்பிரபலங்கள் பலரும் நாப்கின்களுடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
ரியல் பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம்.
பாலிவுட் நடிகர் அமீர்கான்.
தமிழ் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் சோனம் கபூர்.