கேரளாவில் கேளிக்கை வரி விதிப்பைக் கண்டித்து தியேட்டர்கள் இன்று மூடப்பட்டுள்ளன.
கேரளாவில் சமீபத்தில் சினிமா தியேட்டர்களுக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து கூடுதலாக கேளிக்கை வரிவிதியும் விதிக்கப்பட்டது. அதோடு வெள்ளப்பாதிப்புக்காக கூடுதலாக 1.5 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கேரள சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரிகளால் தொழில் பாதிக்கப்படும் என்றும் வரியை குறைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை அரசு நிராகரித்துவிட்டது.
இதைக் கண்டித்து கேரளாவில் இன்று ஒரு நாள் சினிமா ஸ்டிரைக் நடக்கிறது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.