ஆஸ்கர் விருது : 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 'NoMadLand'

ஆஸ்கர் விருது : 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 'NoMadLand'
ஆஸ்கர் விருது : 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 'NoMadLand'
Published on

93-வது ஆஸ்கர் விருது போட்டியில் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள NoMadLand திரைப்படம், இந்தாண்டு அதிக விருதுகளை வெல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. சீன பெண் இயக்குநர் க்ளோ சாவ் இயக்கியுள்ள இந்தப் படம், வாழ்வின் மீதான பற்றுதலின் அவசியத்தை அழுத்தமாக முன்வைக்கிறது.

2009-ம் ஆண்டு உலகையே தத்தளிக்க வைத்த பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தில் இருக்கும் ஃபெர்ன் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. 60 வயதில் வேலையை இழந்து தவிக்கும் அவரின் கணவரும் மரணித்து விட, அடுத்து என்ன செய்யப் போகிறார் ஃபெர்ன் எனும் கேள்வியை முன்வைத்து நகரத் தொடங்குகிறது NoMadLand திரைப்படம். ஒருபக்கம் தன் உடனிருந்தவர்களை ஒவ்வொருவராக இழக்கத் தொடங்கும் அவர், வாழ்க்கையின் மீது துளியும் வெறுப்பின்றி பற்றுதலோடு பயணிக்கத் தொடங்கும் கணத்தில் முக்கிய திரைப்படமாகவும் மாறி விடுகிறது.

NoMadLand திரைப்படத்தில் ஃபெர்ன் கதாபாத்திரத்தில் 63 வயதான ஃபிரான்சஸ் மெக்டோர்மெண்ட் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை உயிரோட்டத்துடன் திரையில் உலவவிட்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதால் சிறந்த நடிகைக்கான விருதை மூன்றாவது முறையாக நிச்சயம் வெல்வார் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, Fargo, Three Billboards outside ebbing, Missouri படங்களுக்காக இரண்டு முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஃபிரான்சஸ் மெக்டோர்மெண்ட் வென்றிருக்கிறார்.

கோல்டன் குளோப் உள்ளிட்ட 34 சர்வதேச விருதுகளை வென்றிருக்கும் NoMadLand திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், சிறந்த படம், இயக்கம், நடிப்பு திரைக்கதை என நான்கு ஆஸ்கர் விருதுகளை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், NoMadLand படத்தை இயக்கிய சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் அந்நாட்டின் அடக்கு முறைகளைப் பற்றி பேசியதால், திரைப்படம் மற்றும் இயக்குநர் குறித்த செய்திகளுக்கு முழுமையாக தடைவிதித்திருக்கிறது சீன அரசு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com