தமிழில் ரீமேக் ஆகிறது 'சில்ரன் ஆஃப் ஹெவன்'!

தமிழில் ரீமேக் ஆகிறது 'சில்ரன் ஆஃப் ஹெவன்'!
தமிழில் ரீமேக் ஆகிறது 'சில்ரன் ஆஃப் ஹெவன்'!
Published on

உலகப் புகழ்பெற்ற ஈரானிய படமான ’சில்ரன் ஆஃப் ஹெவன்’, தமிழில் ரீமேக் ஆகிறது.

1997-ம் ஆண்டு வெளியான ஈரானிய படம், ’சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. மஜித் மஜிதி இயக்கிய இந்தப் படம் உலகம் முழுவதும் பிரபலமானது. சகோதரன் சகோதரி இடையே நிலவும் பாசம், சகோதரியின் ஷூ தொலைந்து விடுவதால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அதை சமாளிக்க அவர்கள் கையாளும் உத்திகள், ஈரானில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றை குழந்தைகளின் பார்வையிலிருந்து சொல்லும் படம் இது. 1998 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான, ஆஸ்கர் விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது.

பல்வேறு சர்வதேச விழாக்களிலும் கலந்துகொண்டு அனைவரையும் நெகிழ வைத்த இந்த படத்தின் தென்னிந்திய, மொழி மாற்றும் உரிமையை, மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் பெற்றுள்ளன. தமிழில் இந்தப் படத்துக்கு 'அக்கா குருவி' என்று பெயர் வைத்துள்ளனர். இதை, 'மிருகம்' சாமி இயக்குகிறார். உப்பல் வி.நாயனார் ஒளிப்பதிவு செய்கிறார்.


 
முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7 வயது தங்கையாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் நடிக்கின்றனர். நடனக் கலைஞர் தாரா ஜெகதாம்பா அம்மாவாகவும் செந்தில்குமார் அப்பாவாகவும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு கொடைக்கானல் அருகே நடந்து ள்ளது. இப்போது டப்பிங் பணி நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை யில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com