”உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ளார்கள்” - ’அமரன்’ படத்தை பார்த்த முதலமைச்சர் பாராட்டிப் பதிவு!

அமரன் திரைப்படத்தை படக்குழுவுடன் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், தனது படக்குழுவை பாராட்டி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அமரன்
அமரன்முகநூல்
Published on

அமரன் திரைப்படத்தை படக்குழுவுடன் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், தனது படக்குழுவை பாராட்டி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளிட்டுள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், சாய் பல்லவி கதாநாயகியாகவும் நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளியான இன்று ( 31 அக்டோபர்) உலகமெங்கும் வெளியாகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளநிலையில், நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு எகிரிக்கொண்டே போக, இன்று வெளியாகி இருப்பதால், ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'அமரன்' திரைப்படத்தை படக்குழுவினர் சிறப்பு திரையிடல் செய்தனர். முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் உடன் இருந்து படத்தை பார்வையிட்டனர்.

இந்தநிலையில், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், "நண்பர் கலைஞானி @ikamalhaasan அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று #அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் @Rajkumar_KP , மேஜர் முகுந்த் வரதராஜன் - திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி @Siva_Kartikeyan , @Sai_Pallavi92 மற்றும் #Amaran படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

அமரன்
தீபாவளி ஸ்பெஷல் | அமரன் முதல் Bloody Beggar வரை.. இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!

நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் - நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute! @RKFI @gvprakash" என்று தெரிவித்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com