‘அஜித் இதற்குத்தான் வெளியே வருவதில்லை’ - அலிஷா வெளிப்படுத்திய உண்மை 

‘அஜித் இதற்குத்தான் வெளியே வருவதில்லை’ - அலிஷா வெளிப்படுத்திய உண்மை 
‘அஜித் இதற்குத்தான் வெளியே வருவதில்லை’ - அலிஷா வெளிப்படுத்திய உண்மை 
Published on
அஜித் ஏன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பது குறித்து பைக் ரேசர் அலிஷா அப்துல்லா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகின்றன. அவரது நெருக்கமான வட்டத்தினர் இல்லத் திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் தவிர அவர் வெளியே தலை காட்டுவதே இல்லை. இந்தச் செய்தி அனைவரும் அறிந்ததுதான். அவர் தன்னுடைய படங்கள் சம்பந்தமான நிகழ்வுகளுக்குக் கூட வருவதில்லை.  அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக உள்ளேயே இருந்தாலும் அவரை  இன்னும் அதிகம் ரசிகர்கள் விரும்பத் தொடங்கி உள்ளனர் என்பதே உண்மையாக உள்ளது.
திரைப்படங்களில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். அவரது ரசிகர்களை அவர் திரையின் மூலம் மட்டுமே பார்க்க விரும்புகிறார்.  ஆனால் சமூக கடமை என வந்தால் அதனைச் சரியாக அஜித் நடத்தி முடித்து விடுவார்.  ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர் வாக்களிக்க குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்து விட்டுச் செல்வார்.  அவரது குழந்தைகளின் பள்ளி நிகழ்வுகளில்  விருப்பத்துடன் கலந்து கொள்வார். 
அஜித்  ஏன் வெளியே வருவதில்லை. பொது நிகழ்ச்சிகளில் ஏன் கலந்து கொள்வதில்லை என்பது குறித்த காரணத்தை அவர் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், அது குறித்த விளக்கத்தை அஜித்தின் ரசிகரும் பைக் ரேசருமான அலிஷா அப்துல்லா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏன் அஜித் வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புகிறார்  என்பதை இவர் விளக்கியுள்ளார்.
அலிஷா அந்தப் பதிவில், “அஜித் பொதுவெளிக்கு வராததற்குக் காரணம் இதுதான். மக்கள் அவருக்குச் சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை. இது ரேஸ் டிராக்கில் நடந்த ஒரு நிகழ்வாகும். அங்கு மக்கள் அவரை நடக்கக் கூட அனுமதிக்கவில்லை” எனக் கூறியுள்ள அவர் இதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அதில், பெரிய கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு அஜித், வெளியே வர முடியாமல் தவிக்கிறார். 
அலிஷா, அஜித்தின் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர். அலிஷாவின் தந்தை ஆர்.ஏ.அப்துல்லாவும் அஜித்தும் பல சந்தர்ப்பங்களில் கார் பந்தயத்தில் ஒன்றாக ஈடுபட்டுள்ளனர். ஆகவே அஜித் இவர்களது குடும்ப நண்பர். அலிஷா தனது பழைய பேட்டி ஒன்றில், அஜித்தை தனது காட் பாதராக கருதுவதாகக் கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com