சட்டவிரோதமாக இணையதளங்களில் 'அண்ணாத்த' படத்தை வெளியிட தடை

சட்டவிரோதமாக இணையதளங்களில் 'அண்ணாத்த' படத்தை வெளியிட தடை
சட்டவிரோதமாக இணையதளங்களில் 'அண்ணாத்த' படத்தை வெளியிட தடை
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள 'அண்ணாத்த' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. 

தற்போது வெளியாகும் படங்கள் அனைத்தும் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியாவது வழக்கமாகி விட்டது. குறிப்பாக திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாவதற்கு முன்வே ஹெ.டி குவாலிட்டியில் படங்கள் வெளிவந்து விடுகின்றன. இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டுள்ளன.

இந்நிலையில், தனியார் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்புள்ளதாகவும், இந்த படத்தை இதுபோன்ற வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும்  என்பதால், சட்டவிரோதமாக இணையதளங்களில் படத்தை  வெளியிட தடை விதிக்கக்கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com