பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% அனுமதியா? - உயர்நீதிமன்றம் கேள்வி

பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% அனுமதியா? - உயர்நீதிமன்றம் கேள்வி
பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% அனுமதியா? - உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தியேட்டர்களில் 100% இருக்கைகள் அனுமதி குறித்து தமிழக அரசிடம் விரிவான விளக்கம் பெற்று ஜன.11ம் தேதி தரவேண்டும் எனவும், அதுவரை தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கபப்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றமும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறது. அதில், ’’கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தியேட்டர்கள் விவகாரத்தில் குழந்தைகள் போல அரசு மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கவேண்டும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி ஜனவரி 11 ஆம் தேதி வரை தியேட்டர்கள் 50% ரசிகர்கள் அனுமதியுடன்தான் இயங்கவேண்டும்’’ என்று கூறியிருக்கிறது.

மேலும் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் உயர் நீதிமன்ற மதுரை கிளையே விசாரிக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com