”ஹிந்துக்களின் பெயர்களா?” - சர்ச்சையை கிளப்பிய வெப் சீரிஸ்.. நெட்பிளிக்ஸூக்கு மத்திய அரசு சம்மன்!

சர்ச்சையை கிளப்பிய 'IC-814 -- The Kandahar Hijack' வெப் தொடர் குறித்து விளக்கமளிக்கக்கோரி நெட்பிளிக்ஸின் இந்திய தலைமை நிர்வாகிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
நெட்பிளிக்ஸூக்கு மத்திய அரசு சம்மன்
நெட்பிளிக்ஸூக்கு மத்திய அரசு சம்மன்PT
Published on

'IC-814 -- The Kandahar Hijack' தொடர் குறித்து ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸின் CONTENT தலைவரிடம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த வெப் தொடரில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஹிந்துக்களின் பெயர்களை வைத்திருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு IC-814 விமானக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஹிந்துக்களின் பெயர்களை எப்படி வைக்கலாம் என நூற்றுக்கணக்கான சமூக ஊடக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக, செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நெட்பிளிக்ஸின் இந்திய பிரிவு உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்லுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

பின்னணி என்ன?

கடந்த 1999ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து டெல்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்கு கடத்திச் சென்றனர். அங்கு விமான பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்துக்கொண்டு, இந்திய சிறையில் உள்ள மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அதன்பேரில், 3 பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்ட பிறகே, விமானப் பயணிகளை விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com