‘ப்ளூ சட்டை’ மாறன் இயக்கி இசையமைத்த படத்திற்கு தணிக்கைக்குழு தடை!

‘ப்ளூ சட்டை’ மாறன் இயக்கி இசையமைத்த படத்திற்கு தணிக்கைக்குழு தடை!
‘ப்ளூ சட்டை’ மாறன் இயக்கி இசையமைத்த படத்திற்கு தணிக்கைக்குழு தடை!
Published on

‘ப்ளூ சட்டை‘ மாறன்இயக்கியுள்ள ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தணிக்கை குழு தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருபவர் ‘ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன் ’. படங்களை இவர் விமர்சிக்கும் பாணி பலமுறை கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அவரை படமெடுக்க சொல்லி சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் சவால் விடுத்தனர்.

அந்த சவாலை ஏற்ற ‘ப்ளூ சட்டை’ மாறன் ‘ஆன்டி இண்டியன்’ என்ற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கினார். இந்தப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி தணிக்கை குழுவினர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர். மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தடை குறித்து தயாரிப்பாளர் 'மூன் பிக்சர்ஸ்' ஆதம் பாவா கூறியதாவது, “ தணிக்கை குழுவினர் அவர்களது முடிவை கூறியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். விரைவில் இந்தத்தடை நீக்கப்பட்டு ‘ஆன்டி இண்டியன்’ படம் திரைக்கு வரும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com