கதையை காப்பி அடித்தாரா ராஜமவுலி..? பாய்ந்தது வழக்கு!

கதையை காப்பி அடித்தாரா ராஜமவுலி..? பாய்ந்தது வழக்கு!
கதையை காப்பி அடித்தாரா ராஜமவுலி..? பாய்ந்தது வழக்கு!
Published on

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மஹதீரா தனது நாவலை காப்பியடித்து எடுக்கப்பட்ட படம் என நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் பிரபல எழுத்தாளர் எஸ்.எஸ்.சாரி.

தெலுங்கில் மஹதீரா, தமிழில் மாவீரன் என்கிற டைட்டிலில் ராஜமவுலி இயக்கிய இந்தப்படம் வசூலை வாரிக் குவித்தது. அப்போதே இந்தக்கதை காப்பியடிக்கப்பட்டது என சர்ச்சைகள் எழுந்து அடங்கியது. தற்போது மஹதீரா ஹிந்தியில் ரீமேக் ஆக இருகிறது.ராப்டா என பெயரிடப்பட்ட அந்தப்படத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் பிரபல எழுத்தாளரான எஸ்.எஸ்.சாரி. இதுதொடர்பாக ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், மஹதீரா தனது கதை. எனது சாண்டேரி நாவலில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை எனக்கு மட்டுமே சொந்தம் என்பதால், அந்தக் கதைக்கான ஆதாயங்கள் எனக்கே உரியது. கதையை காப்பியடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள எஸ்.எஸ்.சாரி ‘எனது வரலாற்று நாவலான சாண்டேரி கதையை காப்பி அடித்து மஹதீரா படம் எடுக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹர்துல் இந்துமதி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நாவல். இந்துமதி மீது ஹர்துலின் சகோதனுக்கு மோகம் இருப்பதால் அவர்களை பிரிக்க சூழ்ச்சி செய்கிறார். அவனின் சூழ்ச்சியால் காதலர்களான இந்துமதியும் ஹர்துலும் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கின்றனர். மீண்டும் ஆந்திராவில் மறுஜென்மம் எடுக்கும் அவர்கள் எப்படி இணைந்தார்கள் என்பதே நான் எழுதிய சாண்டேரி நாவல். ஆகவே எனது நாவல் காப்பி அடிக்கபட்டு மஹதீரா படமாக எடுக்கப்பட்டு தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது’ என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com