நாச்சியார் சர்ச்சை: ஜோதிகா, பாலா மீது வழக்கு

நாச்சியார் சர்ச்சை: ஜோதிகா, பாலா மீது வழக்கு
நாச்சியார் சர்ச்சை: ஜோதிகா, பாலா மீது வழக்கு
Published on

நாச்சியார் டீஸரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனம் தொடர்பாக இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. இப்படத்தின் டீஸரை கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிகாவின் கணவர் சூர்யா இணையத்தில் வெளியிட்டார். டீஸரின் இறுதியில் ஜோதிகா பேசிய ஒற்றை வார்த்தைக்கு பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சமூகவலைதளத்திலும் இது விவாத பொருளாக மாறியது.

இந்நிலையில் டீஸரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனம் தொடர்பாக இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜன் என்பவர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், நாச்சியார் டீஸரில் நடிகை ஜோதிகா பெண்மையை இழிவுபடுத்தும் வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதும், இயக்குநர் பாலா மீதும் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மனு வரும் 28-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com