125 நாட்கள் உருவான ஐஸ்வர்யா ராய் பிரத்யேக ஆடை

125 நாட்கள் உருவான ஐஸ்வர்யா ராய் பிரத்யேக ஆடை
125 நாட்கள் உருவான ஐஸ்வர்யா ராய் பிரத்யேக ஆடை
Published on

கேன்ஸ் திரைப்பட விழாவைக் கலக்கிய ஐஸ்வர்யா ராய், சோனம் கபூரின் பிரத்யேக ஆடைகள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.  

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் 17 ஆவது ஆண்டாக நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். வழக்கம் போல இந்த ஆண்டும் அவர் அணிந்து வந்த ஆடை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 10 அடி நீளத்தில் பட்டாம்பூச்சி வடிவத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட இந்த ஆடை பட்டு நூல்களை கொண்டு முழுமையான கைவேலைப்பாடுகளுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஐஸ்வர்யா ராய்க்காக, இந்த ஆடையை மைக்கேல் சின்கோ என்ற வடிவமைப்பாளர் உருவாக்கியிருந்தார். இந்நிலையில் இந்த ஆடையை வடிவமைப்பதற்காக சுமார் 125 நாட்கள் எடுத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அண்மையில் திருமண‌ம் செய்து கொண்ட பாலிவுட் நடிகை சோனம் கபூர் மெகந்தி நிகழ்ச்சிக்காக அணிந்திருந்த ஆடையும் விருந்தினர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த ஆடையை வடிவமைக்கவும் 18 மாதங்கள் ஆனதாக அதன் வடிவமைப்பாளர்களான அபு ஜானியும், சந்தீப் கோசலாவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com