ஜவுளிக்கடைகள் திறப்பு விழாக்களில் பங்கேற்று கடைகளைத் திறந்து வைத்து வந்த சமந்தா தற்போது ஜவுளி உற்பத்தி செய்யும் கைத்தறி நிறுவனத்திற்கு உரிமையாளராகி இருக்கிறார்.
தனது நண்பர்களான வம்சி, ஸ்ரீராம் ஆகியோருடன் இணைந்து தெலங்கானாவில் தனது கம்பெனியை தொடங்கியுள்ளார். இந்த கம்பெனிக்கு தனது பெயரின் முதல் எழுத்தையும், தனது நண்பர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்தையும் சேர்த்து எஸ்விஎஸ் பார்ட்னர்ஸ் எனப் பெயரிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்கிற பல நாள் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தெலங்கானா அரசின் கைத்தறி தயாரிப்புகளுக்கான தூதராக சமந்தா நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவரே கைத்தறி நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.