பத்மாவதிக்கு பிரிட்டன் சென்சார் போர்டு அனுமதி

பத்மாவதிக்கு பிரிட்டன் சென்சார் போர்டு அனுமதி

பத்மாவதிக்கு பிரிட்டன் சென்சார் போர்டு அனுமதி
Published on

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள பத்மாவதி திரைப்படம் பிரிட்டனில் வெளியாவதற்கு பிரிட்டன் தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. 

சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள படம் பத்மாவதி. இதுவரை இந்தியாவில் எந்த திரைப்படத்திற்கும் ஏற்படாத எதிர்ப்புகள் இந்த படத்திற்கு எழுந்துள்ளது. பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் இந்த படம் வெளியாவதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. உச்சக்கட்டமாக இந்த படத்தில் நடித்த தீபிகா படுகோனேனின் தலைக்கு விலையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை பிரிட்டனில் வெளியாவதற்கு, பிரிட்டன் சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது.  

இந்த படத்திற்கு பிரிட்டனில் 12ஏ ரேட்டிங்குடன் தணிக்கை குழு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் காரணமாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்க்கக்கூடாது எனவும் 18 வயதை தாண்டிய அடல்ட்ஸ் மட்டும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் ஒன்றாம் தேதி பத்மாவதி படம் ரிலீஸ் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக அதன் ரிலீஸ் தாமதப்பட்டு வருகிறது. இதனிடையே பிரிட்டனில் சென்சார் அனுமதியைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி அங்கு ரிலீஸ் செய்யலாம். ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் பத்மாவதி திரைப்படம் இந்தியாவில் வெளிவருவதற்கு முன்பு, பிரிட்டனில் ரிலிஸாகாது என்று தெரிவித்துள்ளனர். 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com