#BoycottSaiPallavi ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்.. ’சீதா’வாக சாய் பல்லவி நடிக்க எதிர்ப்பு! பின்னணி என்ன?

#BoycottSaiPallavi எனும் ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. காரணம் சாய்பல்லவி சில ஆண்டுகளுக்கு முன் கொடுத்த நேர்காண்லும், அதில் தெரிவித்திருந்த சில கருத்துக்களும்தான்.
sai pallavi
sai pallavipt web
Published on

ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

தங்கல் போன்ற மிகப்பெரும் வெற்றி பெற்ற படங்களை இயக்கிய நித்தேஷ் திவாரி தற்போது ‘ராமாயணா’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், கடவுள் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சீதாவாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ராவணனாக யஷ் நடிக்கிறார். பல மொழிகளில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. படக்குழுவினர் நடிகர்கள் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில்தான் #BoycottSaiPallavi எனும் ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. காரணம் சாய்பல்லவி சில ஆண்டுகளுக்கு முன் கொடுத்த நேர்காணலும், அதில் தெரிவித்திருந்த சில கருத்துக்களும்தான்.

சாய் பல்லவி மற்றும் ராணா டகுபதி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு Virata Parvam எனும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சாய்பல்லவி வெண்ணிலாவாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் 1990களில் தெலங்கானாவில் இருந்த நக்சலைட்களின் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

sai pallavi
மதுரை: மத்திய சிறை கைதிகள் தயாரித்த இனிப்பு பதார்த்தங்கள் - விற்பனை ஜோர்...!

வன்முறை என்றால் wrong form of communication

இந்த திரைப்படம் தொடர்பான நேர்காணலில் சாய்பல்லவி தெரிவித்திருந்த கருத்துக்கள்தான் தற்போது எதிர்ப்பினைச் சம்பாதித்து வருகிறது. அந்த வீடியோவில் ஒரு இடத்தில், நக்சல் சீருடை அணிந்துகொண்டு, துப்பாக்கி பிடித்து நடித்தது எப்படி இருந்தது. பெண்கள் துப்பாக்கி பிடித்துக்கொண்டு ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்கள் மீது எதாவது அனுதாபம் ஏற்பட்டதா? என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த சாய்பல்லவி, “அது ஒரு கருத்தியல் தானே. உங்களுக்கு ஒரு சித்தாந்தம் இருக்கும். எனக்கு வன்முறை என்றால் wrong form of communication. சட்டம் என்ற ஒன்று இருக்கும்போது எது சரி எது தவறு என்று பார்க்க வேண்டும்தானே. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் எங்கு செல்ல வேண்டும் என்பதே தெரியவில்லை. எனவே அவர்கள் குழுகுழுவாக செயல்பட்டனர். நாங்களே நல்லது செய்துகொள்கிறோம் என்ற மனநிலை அவர்களுடையது. அது ஏதோ ஒரு காலத்தில் நடந்தது.

இதை முன்பே ஒருமுறை கூறியுள்ளேன். பாகிஸ்தானில் இருக்கும் மக்கள் நம்முடைய ராணுவத்தை பயங்கரவாதம் என சொல்லுவார்கள். நமக்கு அவர்கள்.. இருதரப்புக்கும் பார்வைகள் மாறும். எனக்கு வன்முறை என்பது குறித்தும், எது சரி எது தவறு என்பது குறித்தும் புரிந்துகொள்வது கஷ்டம். அந்த நேரத்தில் (90களில் தெலங்கானா) இதைச் செய்தால் நமக்கு நீதி கிடைக்கும் என மக்கள் நம்பினர். இதைச் செய்துவிட்டால் நமது குடும்பத்திற்கும், நமது பிள்ளைகளுக்கும் நல்லது நடக்கும் என நம்பினார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

sai pallavi
சென்னை: தவெக மாநாட்டிற்குச் சென்ற அஜித் ரசிகருக்கு நேர்ந்த பரிதாபம்

நல்ல மனிதராக இருக்க வேண்டும்

அந்த வீடியோவில், “சில தினங்களுக்கு முன்கூட காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வந்தது இல்லையா.. அதில், கடந்த காலங்களில் காஷ்மீர் பண்டிட்கள் என்ன இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதையெல்லாம் காட்டினார்கள். மதம் சார்ந்த பிரச்னைகள் என எடுத்துக்கொண்டால், கொரோனா காலக்கட்டத்தில் கூட, வாகனத்தில் பசுக்களை ஏற்றிச் சென்றனர்; வாகனத்தை இயக்கியவர் இஸ்லாமியராக இருந்தார்; அவரை அடித்து ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொன்னார்கள்.

அப்போது நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. நாம் மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் மனிதர்களாக இருந்தால் பிறரைத் துன்புறுத்த மாட்டோம். சக மனிதர் மேல் அந்த அழுத்தத்தை வைக்க மாட்டோம். நீங்கள் நல்ல மனிதராக இருந்து இடதுசாரி, வலதுசாரி என எந்தப் பக்கமாக இருந்தாலும் நீங்கள் சமமாகத்தான் இருப்பீர்கள்” எனத்தெரிவித்தார்.

தற்போது இந்த கருத்துதான் இணையத்தில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. சாய்பல்லவி இந்தியாவின் ராணுவத்தை இழிவு படுத்துவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில் ராமாயணத்தில் சீதாவாக சாய் பல்லவி நடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய ராணுவத்தை இவ்வாறு கூறுவது தவறு என்றும் சில பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

sai pallavi
மனிதர்களில் மரபணு திருத்த தொழில்நுட்பம்.... உலகின் முதல் நாடாக ஒப்புதல் அளித்த தென்னாப்ரிக்கா!

சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் திபாவளி அன்று அமரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

sai pallavi
ராமநாதபுரம்: போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சி - மாணவன் உட்பட இருவர் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com