சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக நடிகர் அமீர்கான் அறிவிப்பு!

சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக நடிகர் அமீர்கான் அறிவிப்பு!
சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக நடிகர் அமீர்கான் அறிவிப்பு!
Published on

நடிகர் அமீர் கான் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் நேற்று தனது 56 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்கள் முழுக்க தெறிக்கவிட்டனர். இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அமீர்கான்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த என் அன்பிற்குரியவர்களுக்கு இதயத்திலிருந்து நன்றி. உங்கள் வாழ்த்துகளால் எனது இதயம் நிரம்பி இருக்கிறது. இதுதான் சமூக வலைதளங்களில் எனது கடைசி பதிவாக இருக்கும். இதில், நான் சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும், தற்போது விலகி இருக்க உறுதியாக நினைக்கிறேன். எனது அமீர்கான் புரொடொக்‌ஷனை அதிகாரபூர்வ சேனலாக மாற்றியதால் எதிர்காலத்தில் எனது படங்களின் அப்டேட்களை இதில் தெரிந்துகொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் அமீர்கான் கடந்த 2018 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில்  வந்தார். தற்போது வரை 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுக்கும்மேல் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Aamir Khan (@_aamirkhan)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com