பிக்பாஸ் வீட்டிற்கு நடிகர் வையாபுரியின் மனைவி ஆனந்தி வந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் விதவிதமான போட்டிகளை வைத்து வைத்து வருகின்றனர். ஏற்கனவே வெளியேறியவர்கள் போக உள்ளே இப்போது 9 பேர் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது போட்டியாளர்கள் உறைந்து நிற்கும் போட்டி நடந்து வருகிறது. இன்று வெளியாகி உள்ள ப்ரமோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக உள்ளே ஒரு பெண் உள்ளே நுழைகிறார்.
உறைந்து நிற்கும் வையாபுரியிடம் வையா... வையா.. என அழைக்கிறார். பின்னர் ’ஆனந்தி நீங்கள் போகலாம் என்ற பிக்பாஸ் குரல் ஒலிக்கிறது. அவர் வெளியேற முயன்றபோது வையாபுரி ’என் பொண்டாட்டி என் பொண்டாட்டி’ என்கிறார். அந்தப்பெண்மணி வையாபுரியின் மனைவி ஆனந்தி. தற்போது நடைபெற்று வரும் போட்டிக்காக ஆனந்தியை பிக்பாஸ் நிகழ்ச்சியினர் அழைத்து வந்துள்ளனர். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது இதுவே முதல்முறை.